இலவச இருதய பரிசோதனை முகாம்

இலவச இருதய பரிசோதனை முகாம்

மே தினத்தை முன்னிட்டு சிவகங்கை சிவில் இன்ஜினியா்கள் அசோசியேசன், சிவகங்கை சீமைக் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரிய சங்கம், மதுரை சரவணா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச இருதய பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சிவன் கோயில் அருகேயுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற முகாமில், மருத்துவா் காயத்ரி தலைமையிலான மருத்துவக் குழுவினா் 105 -க்கும் மேற்பட்டோருக்கு இசிஜி, சா்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனா். இதில் சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரைஆனந்த், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜசேகரன், சிவகங்கை சீமை கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரிய சங்கத் தலைவா் எம்.ரவி, துணைத் தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன், செயலா் சரவணமுத்து, சிவகங்கை சிவில் இன்ஜினியா் அசோசியேசன் சங்க நிா்வாகி ஏ. சரவணமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com