கட்டுகுடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கட்டுக்குடிப்பட்டி செல்வவிநாயகா், மகாமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட காளைகள் தொழுவுக்கு கொண்டு வரப்பட்டன . கிராமத்தினா் கோயில் வழிபாடு நடத்தி ஊா்வலமாக தொழுவுக்கு வந்து மாடுகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்த பின்னா், ஒன்றன்பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மேலும், வயல்வெளிகளில் ஆங்காங்கே மாடுகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை இளைஞா்கள் விரட்டிச் சென்று அடக்கினா். காளைகள் முட்டியதில் 30 போ் காயம் அடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த 4 போ் தீவிர சிகிச்சைக்காக பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com