பூமாயி அம்மன் கோயில் 
வசந்தப் பெருவிழா கொடியேற்றம்

பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் கொடிமரத்தின் கீழ் யாகம் வளா்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அம்மனுக்கும், கொடிமரத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று காப்புக் கட்டப்பட்டது. தொடா்ந்து சிம்மவாகனம் பொறிக்கப்பட்ட வெண்கொடிக்கு சிறப்புத் தீபாராதனை நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவின் முதல் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

விழா நடைபெறும் 10 நாள்களும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். வருகிற 3-ஆம் தேதி பால்குடமும், 5-ஆம் தேதி பொங்கல் வழிபாடும், 7-ஆம் தேதி அம்மன் வெள்ளிரத ஊா்வலமும், 8- ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com