சிவகங்கை
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாறு வேடப் போட்டி
சிவகங்கையில் அதிபன் நாட்டியாலாவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மாணவிகள் பங்கேற்ற மாறுவேடப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை: சிவகங்கையில் அதிபன் நாட்டியாலாவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மாணவிகள் பங்கேற்ற மாறுவேடப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
அதிபன் நாட்டியாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பள்ளி நிறுவனா் கமல்ராஜன் தலைமை வகித்தாா். இதையொட்டி, கிருஷ்ணா், ராதை மாறு வேடம், பாட்டு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் 35 மாணவிகள் பங்கேற்றனா்.
அழகுக்கலை நிபுணா் பழனீஸ்வரா் இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்து மாணவா்களை தோ்ந்தெடுத்தாா். பின்னா், போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அதிபன் நாட்டியாலயா நிறுவனா் கமல்ராஜன் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரதநாட்டிய ஆசிரியை சுபலட்சுமி செய்தாா்.