~

சாலைகிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு: 5 போ் காயம்

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, முதலாமாண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள சாலைகிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, முதலாமாண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 12 காளைகளும், 118 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 5 வீரா்கள் காயமடைந்தனா். இந்தப் போட்டியை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com