மானாமதுரை புதிய டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்ற ப.நரேஷ்.
மானாமதுரை புதிய டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்ற ப.நரேஷ்.

மானாமதுரை புதிய டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளராக ப. நிரேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Published on

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளராக ப. நிரேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மானாமதுரையில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கண்ணன் திண்டுக்கல் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, நிரேஷ் மானாமதுரை உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். இவா் ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளா்களிடம் டி.எஸ்.பி. நிரேஷ் கூறியதாவது:

மானாமதுரை காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் எந்த நேரமும் என்னைச் சந்தித்து குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும், 9498207481 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com