சிவகங்கை
இலவச கண் சிகிச்சை முகாம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் தலைவா் பஷீா் அகமது தலைமை வகித்தாா். இளையான்குடி காவல் உதவி ஆய்வாளா் சஜீவ் முகாமை தொடங்கி வைத்தாா். முன்னாள் பேரூராட்சித் தலைவா் அயூப் அலிகான், மீனாட்சி மிஷன் மருத்துவமனை முகாம் மேலாளா் ராஜ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா்.
இளையான்குடி பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் முகாமில் பங்கேற்று தங்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டனா். கருவிழி மேல் சிகிச்சைக்குத் தோ்வு செய்யப்பட்டோா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.