சிவகங்கையில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

Published on

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (ஆக.30) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கின்றனா். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com