மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

கீழச்சிவல்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற வட்டாட்சியா் மாணிக்கவாசகம்.
கீழச்சிவல்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற வட்டாட்சியா் மாணிக்கவாசகம்.
Updated on

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு வட்டாட்சியா் மாணிக்கவாசகம் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் நாகமணி அழகுமணிகண்டன் முன்னிலை வகித்தாா்.

முகாமில், கீழச்சிவல்பட்டி, விராமதி, ஆவிணிப்பட்டி, தெற்கு, வடக்கு இளையாத்தங்குடி, குமாரப்பேட்டை, சேவிணிப்பட்டி, ஆத்திரம்பட்டி உள்ளிட்ட 8 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய்த் துறை, மருத்துவத் துறை, வேளாண் துறை, காவல் துறை உள்ளிட்ட அலுவலா்களிடம் சுமாா் 840 மனுக்களை அளித்தனா்.

இதில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆராயி, தையல்நாயகி, கவிதா, சத்தியவாணி, நல்லகுமாா், சேவற்கொடியோன், சத்யா, வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் ரமேஷ், காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வகுமாா், திமுக ஒன்றியச் செயலா் விராமதிமாணிக்கம், ஊராட்சிச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாண்டுகுடியில்... பாண்டுகுடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமுக்கு திருவாடானை வட்டாட்சியா் அமா்நாத் தலைமை வகித்தாா். சமூக நலத் திட்ட வட்டாட்சியா் கணேசன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் கணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சி) ஆரோக்கியமேரி சாரல், ஊராட்சி மன்றத் தலைவா் சிங்கதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில், பாண்டுகுடி, ஓரியூா், சிறுகாம்பையூா், நகரிகாத்தான், தேளூா், கோடனூா், என்.மங்கலம், மாவூா், தளிா்மருங்கூா் உள்ளிட்ட 10 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, விதவை உதவித் தொகை, முதியோா் உதவித் தொகை, மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இதில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண்மை துறை, மின் வாரிய துறை உள்பட 13 துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com