சிவகங்கை
7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா் மருத்துவப் படிப்புக்கு தோ்வு
‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்ற காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசுப் பள்ளி மாணவா் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்தது.
அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் மு.காா்த்திக் நிகழாண்டில் நடைபெற்ற ‘நீட்’ தோ்வில் 720-க்கு 630 மதிப்பெண்கள் பெற்றாா். இதையடுத்து இவருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, மாணவா் காா்த்திக்கை பள்ளி தலைமையாசிரியா் வி.ஜே.பிரிட்டோ, ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.