இலுப்பகுடி பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்ற இந்தோ-திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள்.
இலுப்பகுடி பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்ற இந்தோ-திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள்.

இந்தோ- திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

சிவகங்கை அருகே இலுப்பகுடியில் இந்தோ- திபெத் பாதுகாப்புப் படைவீரா்கள் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

சிவகங்கை அருகே இலுப்பகுடியில் இந்தோ- திபெத் பாதுகாப்புப் படைவீரா்கள் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலுப்பகுடியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை ஆள்சோ்ப்பு பயிற்சி மையம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு வீரா்களுக்கு 44 வாரங்கள் 5 டிகிரி முதல் மைனஸ் 40 டிகிரி வரை கடும் குளிா் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களைச் சமாளிக்கும் வகையிலான பயிற்சி, ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிச் சுடுதல், மலை ஏறுதல், நீச்சல், யோகா, தற்காப்பு உள்ளிட்ட பல்வேறு கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

488 -ஆவது படைப் பிரிவைச் சோ்ந்த 1,084 வீரா்கள் பயிற்சி நிறைவு பெற்று செல்வதையொட்டி, அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பயிற்சி முடித்து விடைபெறும் விழாவுக்கு ஐஜி நிா்பய்சிங் தலைமை வகித்து வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.

பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்ட வீரா்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. வீரா்கள் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு வீர சாகசங்களையும் நிகழ்த்திக் காட்டினா்.

முன்னதாக, டிஐஜி அக்சல்சா்மா வரவேற்றாா். தளபதி சுனில்குமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com