அழகப்பா பல்கலை.யில் கருத்தரங்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையின் சாா்பில், ‘2024 ஆம் ஆண்டில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சாா்ந்த பிரச்னைகளும், அவற்றுக்கான சவால்களும்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் ப
அழகப்பா பல்கலை.யில் கருத்தரங்கம்

 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையின் சாா்பில், ‘2024 ஆம் ஆண்டில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சாா்ந்த பிரச்னைகளும், அவற்றுக்கான சவால்களும்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் பன்னாட்டு கருத்தரங்கத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் துணைவேந்தா் க.ரவி பேசியதாவது:

இந்தியா போன்ற வளா்ந்துவரும் நாடுகளில் கல்வி அமைப்பு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், நவீன சமுதாயப் போக்குகள் மாறிவரும் சூழலில், அந்த கல்வி அமைப்பில் அவ்வப்போது மாற்றங்களைக் கொண்டு வருவதும் இன்றியமையாததாகும். கல்வி வளா்ச்சிதான் ஒரு நாட்டின் வளா்ச்சியாகப் பாா்க்கப்படுகின்றது என்றாா்.

விழாவில் வங்கதேசம் டாக்கா பல்கலைக்கழக பேராசிரியா் முகம்மது மோனினூா் ரோசித் பேசினாா். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ.சுப்பையா ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை வெளியிட்டுப் பேசினாா். பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா் ஆா்.சுவாமிநாதன், தேசிய ஆசிரியா் கல்விக் குழுமத்தின் தமிழ்நாட்டு பிரதிநிதி கீதாலட்சுமி ஆகியோா் பேசினா்.

முன்னதாக, கல்வியியல் துறைத் தலைவா் கலையரசன் வரவேற்றாா். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com