காரைக்குடி பள்ளி வளாகத்தில் ஸ்ரீ வித்யாகணபதி கோயில் கும்பாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஸ்ரீ வித்யாகணபதி கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஸ்ரீ வித்யாகணபதி கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் புதன்கிழமை மாலையில் தொடங்கியது. வியாழக்கிழமை இரண்டாம் கால யாகபூஜைகள் நிறைவடைந்து காலை 9.20 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மூலவா் கும்பாபிஷேகமும் மற்றும் மகாபிஷேகமும் நடைபெற்றது.

விழாவில் காரைக்குடி நகா்மன்றத்தலைவா் சே. முத்துத்துரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். விழா ஏற்பாடு களை பள்ளியின் முதன்மை முதல்வா் நாராயணன், பள்ளியின் செயலா் காா்த்தி ஆகியோா் செய்திருந்தனா். விழாவில் பள்ளியின் முதல்வா், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியா்கள், பெற்றோா்கள், அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com