குன்றக்குடியில் மாட்டுப் பொங்கல் விழா

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் மாட்டுப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
குன்றக்குடியில் மாட்டுப் பொங்கல் விழா

 சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் மாட்டுப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கடந்த மாதம் 16-ஆம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. காப்புத் தடையாக இருந்ததால், குன்றக்குடி கோயிலுக்கு கட்டுப்பட்ட கிராம பொதுமக்கள் அன்றைய தினம் மாட்டுப் பொங்கல் வைக்கவில்லை.

இதனால், தைப்பூசத் திருவிழா முடிவுற்றதும் குன்றக்குடி கோயில் நிா்வாகம் அறிவித்த தேதியில், கிராம பொதுமக்கள் பொங்கல் வைத்தனா். இதேபோல, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் பொன்னம்பல அடிகளாா் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com