சுகாதாரப் பணிக்கு பேட்டரி வாகனங்கள் சேவை தொடக்கம்

மானாமதுரை நகராட்சியில் சுகாதாரப் பணிக்கு பேட்டரி வாகனங்களின் சேவை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
சுகாதாரப் பணிக்கு பேட்டரி வாகனங்கள் சேவை தொடக்கம்

மானாமதுரை நகராட்சியில் சுகாதாரப் பணிக்கு பேட்டரி வாகனங்களின் சேவை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த நகராட்சிக்கு சுகாதாரப் பணிக்கு 12 பேட்டரி வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டன. இந்த நிலையில், இந்த வாகனங்களுக்கு பேட்டரிகள் பொருத்தப்பட்டு, அதன் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி பேட்டரி வாகனங்களின் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதில் நகராட்சி ஆணையா் ரங்கநாயகி, துணைத் தலைவா் பாலசுந்தரம், பொறியாளா் முத்துகுமாா், சுகாதார ஆய்வாளா் பாண்டிச்செல்வம், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com