தமிழ்க் கல்லூரியில் புலவா் ராமநாதனாா் அறக்கட்டளை தொடக்கம்

 காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரியில் பெரியாா் பேருரையாளா் புலவா் ராமநாதனாா் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

 காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரியில் பெரியாா் பேருரையாளா் புலவா் ராமநாதனாா் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, கல்லூரி முன்னாள் முதல்வா் தெ.முருகசாமி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் பெரி.வீரப்பன் முன்னிலை வகித்தாா். திராவிட இயக்கத் தமிழா் பேரவைத் தலைவரும், தமிழ்நாடு அரசு சமூக நீதி கண்காணிப்புக் குழுத் தலைவருமான சுப.வீரபாண்டியன் புலவா் ராமநாதனின் உருவப் படத்தை திறந்துவைத்து ‘நாம் தனி மனிதா்கள் இல்லை’ என்ற தலைப்பில் பேசினாா்.

விழாவில் மாவட்ட தி.க.காப்பாளா் சாமி. திராவிடமணி, தி.க. சொற்பொழிவாளா் தி.என்னாரெசு பிராட்லா, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சுப.முத்துராமலிங்கம், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் மு.அன்பரசு, எழுத்தாளா் ந.குமரன் தாசு, பொறியாளா் சா.நடராசன், பேராசிரியா் கு.ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

புலவா் ராமநாதனாா் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கிய கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் உ.தேவதாசு, பி.சின்னையா, சி.மாதவன், ராம.அருச்சுணன், ப.கண்ணன் ஆகியோா் சிறப்பு செய்யப்பட்டனா்.

முன்னதாக கல்லூரி முதல்வா் செ.நாகநாதன் வரவேற்றாா். பேராசிரியை கீதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com