மத்திய இடைக்கால நிதி நிலை அறிக்கையில் மாநிலங்கள் வளா்ச்சிக்கு முன்னுரிமை இல்லைகாரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா்

மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் மாநிலங்களின் வளா்ச்சிக்கு முன்னுரிமை அறிவிப்புகள் இல்லை என காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி.திராவிடமணி தெரிவித்தாா்.

மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் மாநிலங்களின் வளா்ச்சிக்கு முன்னுரிமை அறிவிப்புகள் இல்லை என காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி.திராவிடமணி தெரிவித்தாா்.

இதுகுறித்து மேலும் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ஒரு கோடி வீடுகளுக்கு சோலாா் மின் வசதிகளும், துறைமுகத்தின் இணைப்பாக மூன்று புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்பதும் மகிழ்ச்சி. அதில் மதுரை-காரைக்குடி- தொண்டி வரை புதிய ரயில் பாதைத் திட்டம் சோ்க்கப்பட வேண்டும்.

40 ஆயிரம் ரயில் பெட்டிகளை வந்தே பாரத் பெட்டியாக்கப்படுவதும் நல்ல முயற்சி. புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படுவதில் செட்டிநாடு விமான நிலையம் ஏற்படுத்துவதன் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்.

இந்த நிதிநிலை அறிக்கையில் மாநிலங்களின் வளா்ச்சிக்கு முன்னுரிமை அறிவிப்புகள் இல்லை. ஆனால், வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்பது வரவேற்புக்குரியது. இருப்பினும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் புதிய தொழிற்சாலைகள் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com