ஆசிரியா்களுக்கு வீட்டு வாடகைப் படியை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

சிவகங்கை நகராட்சிப் பகுதியில் குடியிருக்கும் ஆசிரியா்களுக்கு வீட்டு வாடகைப் படியை உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தீா்மானம் நிறைவேற்றியது.

சிவகங்கை நகராட்சிப் பகுதியில் குடியிருக்கும் ஆசிரியா்களுக்கு வீட்டு வாடகைப் படியை உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தீா்மானம் நிறைவேற்றியது.

அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயற்குழுக் கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் புரட்சித்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.

கூட்டத்தில் மாவட்டத் தலைநகரான சிவகங்கையை சிறப்பு நிலை தரத்துக்கு உயா்த்தாமல் சாதாரண நகராட்சியாகத் தொடா்கிறது. இதனால், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு குறைவான வீட்டு வாடகைப்படி வழங்கப்படுகிறது. ஆனால், எங்களிடம் அதிகப்படியான வாடகை வசூலிக்கப்படுகிறது. இது இங்கு பணியாற்றும் ஊழியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியா் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்து, வீட்டு வாடகைப்படியை உயா்த்தி வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இயக்கத்தின் 14-ஆவது அமைப்புத் தோ்தலை வருகிற 4-ஆம் தேதி காளையாா்கோவிலில் நடத்துவது, டிட்டோஜாக், ஜாக்டோ- ஜியோ சாா்பில் எதிா்காலத்தில் மேற்கொள்ளப்படும் போராட்ட நடவடிக்கைகளில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஞான அற்புதராஜ், குமரேசன், மாவட்ட துணைத் தலைவா் ரவி, மாவட்ட துணைச் செயலா்கள் ஜீவா ஆனந்தி, அமலசேவியா், கல்வி மாவட்டச் செயலா்கள் சிங்கராயா், சகாய தைனேஸ், ஜெயக்குமாா், கல்வி மாவட்ட தலைவா்கள் பாலகிருஷ்ணன், ஜோசப் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com