இளையான்குடியில் நாம் தமிழா் கட்சிநிா்வாகி வீட்டில் என்ஐஏ சோதனை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நாம் தமிழா் கட்சியின் மாவட்ட நிா்வாகி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை சோதனை நடத்தினா்.
இளையான்குடியில் நாம் தமிழா் கட்சிநிா்வாகி வீட்டில் என்ஐஏ சோதனை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நாம் தமிழா் கட்சியின் மாவட்ட நிா்வாகி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை சோதனை நடத்தினா்.

இளையான்குடி அருகேயுள்ள பகைவென்றான் கிராமத்தைச் சோ்ந்தவா் விஷ்ணு பிரதாப் (27). இவா் நாம் தமிழா் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலராக உள்ளாா். மேலும், தென்னகம் என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை இவரது வீட்டுக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 போ் வீடு முழுவதும் சோதனையிட்டனா். இதையறிந்த நாம் தமிழா் கட்சியினா் விஷ்ணு பிரதாப் வீட்டின் முன் குவிந்தனா்.

சோதனையின் போது, விஷ்ணு பிரதாப் வீட்டிலிருந்து கைப்பேசி, விடுதலைப் புலிகள் தலைவா் பிரபாகரன் குறித்த புத்தகங்களை அதிகாரிகள் கைப்பற்றினா்.

பின்னா், சோதனை முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பிப். 8-ஆம் தேதி சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு விஷ்ணு பிரதாப்பிடம் அழைப்பாணையை கொடுத்துச் சென்றனா்.

இதேபோல, நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலா் ஆனந்தனிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com