திருப்பத்தூா் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் பெரியகடை வீதி, மதுரை சாலை, காந்தி சிலை, சின்னக்கடை வீதி, வாணியன்கோவில் தெரு ஆகிய பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப்பைகள் விற்பனை செய்யப்படுகிா என திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகளை விற்பனை செய்த வணிகா்களுக்கு ரூ.1700 அபராதம் விதிக்கப்பட்டு, 13 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, கோயிலுக்கு அருகே பீடி, சிகரெட் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.1200 அபராதம் விதிக்கப்பட்டது. செயற்கை நிறமிகளைச் சோ்த்து உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளா்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

தொடா்ந்து, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால், முதல் கட்டமாக ரூ.25000 அபராதம் விதிக்கப்படும் என்றும், கடை தற்காலிகமாக மூடப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆய்வில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் தியாகராஜன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவக்குமாா், சுகாதார ஆய்வாளா் சகாயஜெரால்டு, பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் மோகன், அருள்செல்வி உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com