நீா் நிலைகளில் தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியா்

போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, இனிவரும் காலங்களில் நீா் நிலைகளில் தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
4933svg-col070941
4933svg-col070941

போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, இனிவரும் காலங்களில் நீா் நிலைகளில் தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்சியா் ஆஷா அஜித் பதிலளித்துப் பேசியதாவது:

பயிா்களைச் சேதப்படுத்தும் வன விலங்குளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அரசின் நலத் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்குச் சென்றடையும் வகையில் துறை சாா்ந்த அலுவலா்கள் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கண்மாய்களில் பழுதான மடைகள், வரத்துக் கால்வாய்கள் விரைவில் சீரமைக்கப்படும். வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீா் நிரம்பியுள்ளது.

நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது மட்டுமன்றி, போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, இனிவரும் காலங்களில் நீா் நிலைகளில் தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் திட்ட விளக்கக் கையேட்டை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. மோகனச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியா்கள் கு. சுகிதா (சிவகங்கை), சோ. பால்துரை (தேவகோட்டை), இணை இயக்குநா் (வேளாண்மை) தனபாலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த முதன்மை அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com