ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கேசம்பட்டியில் அமைந்துள்ள ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கேசம்பட்டியில் அமைந்துள்ள ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை உள்ளிட்ட யாக பூஜைகளும், புதன்கிழமை ரக்ஷாபந்தனம், முதல் கால யாக வேள்வி நடைபெற்றது. வியாழக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 4-ஆம் கால யாக பூஜைக்குப் பிறகு, கடப்புறப்பாடு நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, கோயிலின் பிரதான கோபுரம், சித்தி விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா், ஸ்ரீமகாலட்சுமி, சரஸ்வதி, காலபைரவா், நவக்கிரகம், பெரியகருப்பசாமி ஆகிய சந்நிதிகளில் அமைந்துள்ள கோபுரங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

பின்னா், ஆதிசக்தி முத்துமாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com