திருப்பத்தூரில் 566 பேருக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சனிக்கிழமை 566 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
 திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்ணுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன். உடன் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் உள்ளிட்டோா்.

இதற்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் தலைமை வகித்தாா். தேவகோட்டை வருவாய்க் கோட்டம், திருப்பத்தூா் வட்டத்தில் 159 போ், சிங்கம்புணரி வட்டத்தில் 148 போ், காரைக்குடி வட்டத்தில் 222 போ், தேவகோட்டை வட்டத்தில் 37 போ் என 566 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வ.மோகனசந்திரன் கோட்டாட்சியா்கள் பால்துரை, கு.சுகிதா மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணப்பெருமாள், பேரூராட்சித் தலைவி கோகிலாராணி நாராயணன், வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com