மடப்புரம் கோயில் சமபந்தி விருந்து: பாஜக எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலில் சனிக்கிழமை அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, சமபந்தி விருந்து நடத்தியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலில் சனிக்கிழமை அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, சமபந்தி விருந்து நடத்தியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

கோயில் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியத் தலைவா் கதிரவன் தலைமை வகித்தாா். திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பாஜகவினா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜகவினரை போலீஸாா் கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்று திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். மாலையில் அவா்களை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com