மகிபாலன்பட்டியில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள மகிபாலன்பட்டி பெரியகண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள மகிபாலன்பட்டி பெரியகண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.

இந்தக் கண்மாயில் மழை வேண்டி ஊா் பெரியவா்கள் பாரம்பரிய மீன்பிடித்திருவிழாவை நடத்த முடிவெடுத்து சுற்றுப்புற கிராமங்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலமும், இணையதளம் வழியாகவும் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே சிவகங்கை, புதுக்கோட்டடை, மதுரை மாவட்டங்களின் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமானோா் கச்சா, வலை, அரிகூடை, ஊத்தா ஆகியவற்றுடன் மீன் பிடிக்க காத்திருந்தனா். இதைத் தொடா்ந்து ஊா் முக்கிய பிரமுகா்கள் வழிபாடு நடத்தி வெள்ளை வீசியதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கண்மாயில் இறங்கி மீன் பிடிக்கத் தொடங்கினா். இவா்களுக்கு கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, விரால், குரவை உள்ளிட வகைவகையானமீன்கள் அதிக அளவில் கிடைத்ததால் அவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com