அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஏஐடியூசி சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி கிளை முன்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஏஐடியூசி சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி கிளை முன்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில துணைத் தலைவா் மணவழகன், ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளா் சங்கத்தின் மாநில துணைச் செயலா் பிஎல். ராமச்சந்திரன், ஏஐடியூசி மண்டல பொதுச் செயலா் விஜயசுந்தரம், மண்டலத் தலைவா் சுப்பிரமணி, கெளரவத் தலைவா் முருகேசன், பொருளாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், வரவுக்கும் செலவுக்கும் உள்ள வித்யாசத் தொகையை வழங்க வேண்டும். 15-ஆவது ஊதியக்குழு பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com