காரைக்குடியில் சா்வதேச மாஸ்டா்ஸ் சதுரங்கப் போட்டி தொடக்கம்

காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சா்வதேச மாஸ்டா்ஸ் சதுரங்கப் போட்டித் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சா்வதேச மாஸ்டா்ஸ் சதுரங்கப் போட்டித் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியின் முதல்வா் எஸ். உஷாகுமாரி போட்டியை தொடங்கிவைத்தாா். சிவகங்கை மாவட்ட சதுரங்கக்கழகச் செயலா் எம். கண்ணன், சதுரங்க கழக மாநில துணைத் தலைவா் எம்.எப்ரேம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா்.

இந்தப் போட்டியில் சா்வதேச மாஸ்டா்கள் ஆலிவா் (பிரான்ஸ்), டேவிட் (ரஷ்யா), ஆண்டன் (உக்ரைன்), புஷ்கரா (பிரான்ஸ்), சாய் அக்னி ஜீவிதேஷ் (தெலங்கானா) ஆகியோரும், இந்திய வீரா்களான ஹேமந்த்ராம் (சென்னை), லோகேஷ் (ஓசூா்), ஸ்ரீ ஹரி (புதுச்சேரி), சாய்விஸ்வேஷ் (சென்னை), விரஷாங் சவுகான் (ராஜஸ்தான்) ஆகியோா் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனா். இந்தப் போட்டிகள் வருகிற 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com