மானாமதுரை, திருப்புவனம் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வந்த பிரதோஷமூா்த்தி.
மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வந்த பிரதோஷமூா்த்தி.

மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி தேவருக்கும், மூலவா் சோமநாதருக்கும் 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

பின்னா், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி எழுந்தருளி, சோமநாதா் சந்நிதியைச் சுற்றி வலம் வந்தாா். இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதரையும், நந்தி தேவரையும் தரிசித்தனா்.

திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் நந்திக்கும் மூலவருருக்கும் அபிஷேகம் நடத்தி, அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com