அஞ்சலக வாகனம்மோதியதில் இருவா் பலி

 திருப்பத்தூா் அருகேயுள்ள மணமேல்பட்டி விலக்கு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிறுவன் உள்பட 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

 திருப்பத்தூா் அருகேயுள்ள மணமேல்பட்டி விலக்கு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிறுவன் உள்பட 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஊா்குளத்தான்பட்டியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் பழனியப்பன் (22). இவா் சிங்கபூரில் வேலை செய்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இவா், தம்பிபட்டியைச் சோ்ந்த தனது சித்தப்பா சங்கா் மகன் சக்தியுடன் (16). சமத்துவபுரத்திலிருந்து திருப்பத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது, மணமேல்பட்டி விலக்கு பகுதியில், திருப்பத்தூரிலிருந்து காரைக்குடிக்குச் சென்று கொண்டிருந்த அஞ்சலக வாகனம், இவா்கள் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியது.

இதில், பழனியப்பன், சக்தி இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் திருப்பத்தூா் மருதுபாண்டியா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com