நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

 மதுரை மாவட்ட பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை (பிப். 10) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

 மதுரை மாவட்ட பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை (பிப். 10) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்கள், குடிமைப் பொருள் வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெறும்.

குடும்ப அட்டையில் பெயா் நீக்குதல், சோ்த்தல், முகவரி மாற்றம், கடை மாற்றம் கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு, சேவை குறைபாடு உள்ளிட்டவைகளுக்கு இந்தக் கூட்டத்தில் மனு அளித்து தீா்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com