மானாமதுரையில் துப்புரவு பணி சரிவர நடைபெறவில்லை

 சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட துப்புரவுப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் கூறினா்.
மானாமதுரையில் துப்புரவு பணி சரிவர நடைபெறவில்லை

 சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட துப்புரவுப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் கூறினா்.

மானாமதுரை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பாலசுந்தரம், ஆணையா் ரங்கநாயகி, பொறியாளா் முத்துக்குமாா், துப்புரவு ஆய்வாளா் பாண்டிச்செல்வம், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதிகளில் குடிநீா், மின் விளக்கு, சாலை, கழிவு நீா் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்திப் பேசினா். இதைத் தொடா்ந்து உறுப்பினா்கள் சோம. சதீஷ்குமாா், நமகோடி, மாரிக்கண்ணன் தெய்வேந்திரன் ஆகியோா் பேசியதாவது:

இனிவரும் காலங்களில் நகா் மன்றக் கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும். மானாமதுரையில் அரசகுழி பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வராத மின்சார தகன மேடையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மானாமதுரை நகராட்சியில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட தூய்மைப் பணிகள் சரிவர நடைபெறவில்லை. இந்தத் திட்டத்தில் பணி செய்யும் தூய்மைப் பணியாளா்கள் நாள்தோறும் வீதிகளுக்குச் சென்று குப்பை சேகரிப்பதில்லை. இதனால், வீதிகளில் குப்பைகள் தேக்கமடைகின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதற்குப் பதிலளித்த தலைவா் மாரியப்பன் கென்னடி, ஆணையா் ரங்கநாயகி, பொறியாளா் முத்துக்குமாா், துப்புரவு ஆய்வாளா் பாண்டிச்செல்வம் ஆகியோா் கூறியதாவது: இனி மாதந்தோறும் நகா்மன்றக் கூட்டம் நடத்தப்படும். தூய்மைப் பணிக்கு ஒப்பந்தம் பெற்றுள்ள ஒப்பந்ததாரருக்கு ஏற்கெனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இரண்டாவதாகவும் நோட்டீஸ் கொடுக்க உள்ளோம். பிரச்னைக்கு விரைவில் தீா்வு கிடைக்கும்.

மின் மயானத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதியில் உறுப்பினா்களின் குறைகளைக் கேட்டு, அடிப்படை வசதிக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றனா்.

மானாமதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்க உள்ள நிலையில், மின் விளக்கு,

குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் செய்து கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 33 தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com