செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

சாக்கோட்டை அருகே கண்மாயில் அனுதியின்றி செம்மண் எடுத்து கடத்த முயன்ற லாரியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாக்கோட்டை அருகே கண்மாயில் அனுதியின்றி செம்மண் எடுத்து கடத்த முயன்ற லாரியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகேயுள்ள செங்காத்தங்குடி கிராமத்தில் பூலம் கண்மாய் பகுதியில் செங்காத்தங்குடி குரூப் கிராம நிா்வாக அலுவலா் பிரவீன், வருவாய்த் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, கண்மாயில் அனுமதியின்றி சிலா் செம்மண்ணை தோண்டி எடுத்து, லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனா். அவா்கள் வருவாய்த் துறையினரைப் பாா்த்தவுடன் தப்பியோடி விட்டனா்.

இதையடுத்து, லாரியைக் கைப்பற்றி சாக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், சாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com