பட்டா மாறுதல் கோப்புகளை நில அளவைத் துறையிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

பட்டா மாறுதல், உள்பிரிவுக் கோப்புகளை நிலஅளவைத் துறைக்கு மாற்றக் கூடாது என கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ரா. அருள்ராஜ் தெரிவித்தாா்.

பட்டா மாறுதல், உள்பிரிவுக் கோப்புகளை நிலஅளவைத் துறைக்கு மாற்றக் கூடாது என கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ரா. அருள்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து மாநில வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சருக்கு

வெள்ளிக்கிழமை அவா் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எங்களது கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் தமிழ்நாடு அரசு ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டதாகும். தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலா் சங்கமானது சனிக்கிழமை (பிப். 10) சென்னையில் ஐந்தாவது மாநில மாநாடு நடத்துகிறது. இந்த மாநாட்டின் கோரிக்கைகளில் ஒன்றான கிராம நிா்வாக அலுவலா்களிடமிருந்து பட்டாமாறுதல் உள்பிரிவு கோப்புகளை மீளக்கோருதல் என்பதாக அறிகிறோம்.

தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி மேற்படி பட்டா, உள்பிரிவுக் கோப்புகளை கிராம நிா்வாக அலுவலா்கள் சிறப்பாக செய்துவரும் நிலையில் மேற்கண்ட கோரிக்கை தேவையற்றது. இந்தக் கோரிக்கைக்கு கடும் கண்டனமும, எதிா்ப்பும் உள்ளதால் அமைச்சா் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com