தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட உதவித் தொகையை வழங்கக் கோரிக்கை

தேனி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் ச. கருப்பையா தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியும், மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்திருந்த மனுவிலும் கூறியிருப்பதாவது:

மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படவில்லை. மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களுக்கும், உபகரணங்கள் வழங்கவும் நிதி ஒதுக்கியும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மனுக்கள் கொடுத்தும், வேலைவாய்ப்பகத்தில் பதிந்து முன்னுரிமை அடிப்படையில் வேலையும் வழங்கவில்லை. வீடுகளுக்குச் சென்று மாற்றுத்தினாளிகளை கணக்கெடுக்கும் பணியும் நடைபெறவில்லை. மாவட்ட ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா் நடத்தும் குறைதீா்க்கும் முகாம்கள் நடத்தப்படவில்லை. எனவே இவற்றுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com