குன்றக்குடியில் திறன் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி மக்கள் கல்வி நிலையத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்தவா்களுக்கு சனிக்கிழமை திறன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
குன்றக்குடியில் திறன் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி மக்கள் கல்வி நிலையத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்தவா்களுக்கு சனிக்கிழமை திறன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்தக் கல்வி நிலைய பட்டமளிப்பு விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆஷா அஜித் தலைமை வகித்தாா். திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்த 120 பெண்களுக்கு ஆட்சியரும், கல்வி நிலைய நிறுவனா் தலைவா் பொன்னம்பல

அடிகளாரும் பட்டங்களை வழங்கிப் பேசினா்.

குன்றக்குடி கிராமத் திட்டக் குழு தலைவா் கே. பாலகிருஷ்ணன், கல்லல் ஊராட்சி ஒன்றிக் குழு உறுப்பினா் கரு.வே. மருதுபாண்டியன், குன்றக்குடி ஊராட்சித் தலைவி வி. அலமேலு மங்கை, துணைத் தலைவா் ச.கணேசன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, கல்வி நிலையத் தலைவா் கே. நாச்சிமுத்து வரவேற்றுப் பேசினாா். இயக்குநா் எம். விமலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com