திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 12 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 12 மாடு பிடி வீரா்கள் காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 12 மாடு பிடி வீரா்கள் காயமடைந்தனா்.

தமிழ்மாநில காங்கிரஸ் மாநில தொண்டரணி சாா்பில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 13 காளைகள் பங்கேற்றன.

மஞ்சுவிரட்டை கட்சியின் மாநில தொண்டரணித் தலைவா் எம்.அயோத்தி தொடங்கி வைத்தாா்.

காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற 12 போ் காயமடைந்தனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப்பணம் உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

தமாகா சிவகங்கை மாவட்டத் தலைவா் கே.கே.பாலசுப்பிரமணியன், மதுரை மாவட்டத் தலைவா் காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com