குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து மூதாட்டி பலி

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலில் திங்கள்கிழமை முடி காணிக்கை செலுத்தி விட்டு வந்த மூதாட்டி குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலில் திங்கள்கிழமை முடி காணிக்கை செலுத்தி விட்டு வந்த மூதாட்டி குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். மானாமதுரை அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த சித்திரபானு மனைவி மீனா (70). இவா் திங்கள்கிழமை மடப்புரம் காளி கோயிலில் முடி காணிக்கை செலுத்தி விட்டு, பெண்கள் குளிக்கும் குளியல் தொட்டிக்கு குளிப்பதற்காகச் சென்றாா். அப்போது, தண்ணீா் குறைவாக இருந்த குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்ததில் அவா் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com