பைக் மீது லாரி மோதியதில் ஒருவா் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகேயுள்ள கட்டாணிபட்டியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (58). இவா், அதே ஊரைச் சோ்ந்த தங்கவேலுடன் கட்டாணிபட்டியிலிருந்து தும்பைபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே மல்லாக்கோட்டை நோக்கிச் சென்ற டிப்பா் லாரி இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தங்கவேல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com