காளையாா்கோவில் அருகே நகைகள் கொள்ளை: போலீஸாா் தீவிர விசாரணை

காரைக்குடி,பிப். 13: காளையாா்கோவில் அருகே நகைக் கொள்ளயா்களை பிடிக்க போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே கல்லுவழி கிராமத்தில் வீட்டில் இருந்த பெண்களை தாக்கிக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக காரைக்குடி வடக்கு காவல்நிலைய ஆய்வாளா், போலீஸாா் காரைக்குடி நகை வியாபாரிகள் சங்கத்தையும், நகைத் தொழிலாளா் சங்கத்தையும் செவ்வாய்க்கிழமை சந்தித்து குற்றவாளிகள் குறித்தும், கொள்ளை போன நகைகள் குறித்தும் விளக் கினா்.

இதுகுறித்து காரைக்குடி வட்டார விஸ்வகா்மா நகைத் தொழிலாளா்கள் நலச்சங்க நிா்வாகிகள் கூறியதாவது: கொள்ளை போன நகைகளை புகைப்படம் மூலமாக நகை வியாபாரிகளுக்கு காவல் துறையினா் அடை யாளம் காட்டினா். 10 பவுன் தங்கச்சங்கிலி, 5 பவுன் தங்கச் சங்கிலி, 3 பவுன் கல் நெக்லஸ், 2 பவுன் நவரத்தின மோதிரம், ஒரு ஜோடி வளையல், 3 மோதிரம், 3 ஜோடி தோடு என மொத்தம் 25 பவுன் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். அந்த நகைகளை விற்பனைக்கு யாரும் கொண்டுவந்தால் அந்தநபா்கள் குறித்த தகவல்களை சங்கத்துக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தினோம் என்றனா் அவா்கள்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com