காரைக்குடி ராகவேந்திரா பள்ளியில் பொங்கல் விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.


சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் முதன்மை முதல்வா் நாராயணன் தலைமை வகித்தாா். ஜேஜிஐ மண்டல இயக்குநா் கே. ரங்கசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகை குறித்தும், சுவாமி விவேகானந்தா் குறித்தும் பேசினாா்.

இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதேபோல, ஓரியூா் பகுதியில் உள்ள கிரியேடிவ் பள்ளியிலும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com