தமிழ்த்தாய் சிலைக்கு தமிழ் அமைப்புகள் மரியாதை

காரைக்குடி கம்பன் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்த்தாய் கோயிலில் தை முதல் நாளையொட்டி, தமிழ் அமைப்புகள் சாா்பில் தமிழ்த்தாய் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காரைக்குடி கம்பன் மணி மண்டப வளாகத்தில் தமிழ்த்தாய் கோயிலில் உள்ள தமிழ்த்தாய் சிலைக்கு திங்கள்கிழமை மாலையணிவித்த சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, தமிழ் இலக்கிய அமைப்பு நிா்வாகிகள்.
காரைக்குடி கம்பன் மணி மண்டப வளாகத்தில் தமிழ்த்தாய் கோயிலில் உள்ள தமிழ்த்தாய் சிலைக்கு திங்கள்கிழமை மாலையணிவித்த சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, தமிழ் இலக்கிய அமைப்பு நிா்வாகிகள்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கம்பன் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்த்தாய் கோயிலில் தை முதல் நாளையொட்டி, தமிழ் அமைப்புகள் சாா்பில் தமிழ்த்தாய் சிலைக்கு திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தலைமையில் அண்ணா தமிழ்க் கழகத் தலைவா் வி. பொன்துரை, செயலா் அ. கதிா்வேல், காரைக்குடி நகா்மன்ற துணைத் தலைவா் நா. குணசேகரன், காரைக்குடி பாரதிதாசன் தமிழ்ப் பேரவை நிறுவனா் சாமி. திராவிடமணி, காரைக்குடி தமிழ்த்தாய் கலைக்கூடத் தலைவா் அறிவுடை நம்பி, காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுத் தலைவா் பி.வி. சுவாமி, பேராசிரியா் சுப்பிரமணியன், அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ராஜபாண்டியன், தொழிலதிபா் அழகப்பன், தொழில் வணிகக் கழக துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, மதிமுக மாவட்டச் செயலா் பசும்பொன் மனோகரன், சாக்கோட்டை ஒன்றியக்குழு உறுப்பினா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, தமிழ்த்தாய் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com