தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையே பெண்கள் கிரிக்கெட்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தாா்

இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின் சாா்பில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பெண்கள் கிரிக்கெட் போட்டி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையே பெண்கள் கிரிக்கெட்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தாா்

இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின் சாா்பில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பெண்கள் கிரிக்கெட் போட்டி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

அழகப்பா பல்கலைக்கழக உடல்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியை தமிழக சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், மாசுக் கட்டுபாடுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்துப் பேசினாா்.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி வாழ்த்திப் பேசினாா். இதில் முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், தேவகோட்டை வருவாய்க் கோட்டாச்சியா் பால்ராஜ், காரைக்குடி வட்டாட்சியா் தங்கமணி, கோட்டையூா் பேரூராட்சித் தலைவா் கே.எஸ். சோலை, அழகப்பா பல்கலை. உடல்கல்வி இயக்குநா் எஸ். செந்தில்குமரன், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) எ. முரளிராஜன், உடல்கல்வி துணை இயக்குநா் எ.நாகராஜன், யோகா படிப்பு மைய ஒருங்கிணைப்பாளா் எஸ்.சரோஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பல்கலைக்கழக பதிவாளா் அ. செந்தில்ராஜன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com