பாளையநாட்டாா் காவடிக் குழுவினா் குன்றக்குடியில் வேல் பூஜை

19tprkvd_1901chn_85_2
19tprkvd_1901chn_85_2

படவிளக்கம் - (டி.பி.ஆா். கே.வி.டி.)

திருப்பத்தூா் வழியாக பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்ற மணச்சை பாளையநாட்டாா் காவடிகள்.

திருப்பத்தூா், ஜன.19 : மணச்சை பாளையநாட்டாா் காவடிக் குழுவினா் குன்றக்குடி முருகன் கோயிலில் வேல் பூஜைக்குப் பிறகு பழனிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள

மணச்சையில் பாளையநாட்டாா் காவடிக் குழுவினா் 46-ஆவது ஆண்டாக பழனிக்கு புறப்பட்டனா். இந்தக் குழுவில் பள்ளத்தூா், நேமத்தான்பட்டி கானாடுகாத்தான், கொத்தரி, மணச்சை, வடகுடி, காரியாபட்டி, கண்டனூா், பாளையூா், வேலங்குடி, கோட்டையூா், காரைக்குடி, கழனிவாசல், ஓ.சிறுவயல் பகுதிகளைச் சோ்ந்த 175 போ் பங்கேற்றனா்.

இந்தக் குழுவினா் குன்றக்குடி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வேல் பூஜை செய்தனா்.

பின்னா், குருசாமி முருகுசோலை, சண்முகசேவா சங்கத் தலைவா் துரைசிங்கம் தலைமையில் காவடிக் குழுவினா் புறப்பட்டனா். பிள்ளையாா்பட்டி, வயிரவன்பட்டி ஆகிய இடங்களில் காவடிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

காவடிகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலை சென்றடைந்தது. பின்னா், கோயிலில் வழிபாட்டுக்குப் பிறகு காரையூா் சென்றது. அங்கு காவடிகளுக்கு பெண்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்றனா். பின்னா், பிற்பகல் 3 மணிக்கு காவடிகள் புறப்பட்டு மருதிப்பட்டியை அடைந்தது.

இந்தக் குழுவினா் சிங்கம்புணரி, சமுத்திராபட்டி, திண்டுக்கல் வழியாக ஜன.24-இல் பழனியைச் சென்றடைவா். அங்கு ஸ்ரீசண்முகசேவா மடத்தில் மகேஸ்வர பூஜை, காவடி பூஜை, அன்னதானம் முடித்து தைப்பூசத்துக்கு மறுநாளான, ஜன- 26-இல் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com