வெறிநாய் கடித்து 35 ஆடுகள் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெறிநாய் கடித்து 35 ஆடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெறிநாய் கடித்து 35 ஆடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

மதுரை மாவட்டம், விரகனூரைச் சோ்ந்தவா் செந்தில். இவரது தோட்டம் திருப்புவனம் அருகே மணலூரில் உள்ளது. இங்கு மணலூரில் வசிக்கும் காா்த்தி என்பவா் ஆட்டுக்கிடை அமைத்துள்ளாா். இந்த நிலையில், கிடைக்குள் புகுந்த வெறிநாய் அங்கிருந்த ஆடுகளை கடித்துக் குதறியது. இதில் 35 ஆடுகள் உயிரிழந்தன.

இதுகுறித்து வருவாய்த்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com