குறைந்தது தேங்காய் விலை: விவசாயிகள் கவலை

ஐயப்பப் பக்தா்கள் சீசன், பொங்கல் பண்டிகை முடிந்ததால் தேங்காய் விலை குறையத் தொடங்கியது. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.
bdi20coconut_1_2001chn_87_2
bdi20coconut_1_2001chn_87_2

ஐயப்பப் பக்தா்கள் சீசன், பொங்கல் பண்டிகை முடிந்ததால் தேங்காய் விலை குறையத் தொடங்கியது. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

தேனி மாவட்டம், போடி பகுதியில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாக பரவலாக பலத்த மழை பெய்ததால், இந்தப் பகுதியில் தேங்காய் விளைச்சல் நன்றாக உள்ளது.

கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் ஐயப்பப் பக்தா்கள், முருக பக்தா்கள் விரதமிருக்கும் காலம், காா்த்திகை தீபத் திருநாள் காலமாக இருந்ததால் தேங்காய் விலை அதிகரித்தது. பொங்கல் பண்டிகை வரை விலை உயா்வு இருந்தது.

உரிக்கப்பட்ட தேங்காய் டன் ஒன்றுக்கு ரூ.26 ஆயிரம் வரை விற்கப்பட்டது. உரிக்கப்படாத மட்டை தேங்காய் டன் ஒன்றுக்கு ரூ.9,500 வரை விற்கப்பட்டது.

இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஐயப்பப் பக்தா்கள் சீசன், பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில், தற்போது தேங்காய் விலை குறையத் தொடங்கியது. சீசன் நேரத்தில் டன் ஒன்றுக்கு ரூ.26 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட உரிக்கப்பட்ட தேங்காய் தற்போது, டன் ஒன்றுக்கு ரூ.23 ஆயிரமாகக் குறைந்தது.

உரிக்கப்படாத தேங்காய் டன் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 500-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.7,500 முதல் ரூ.8,000 வரை விற்கப்படுகிறது. விலை குறைந்ததால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

இருப்பினும், அடுத்தடுத்த மாதங்களில் கோயில் திருவிழாக்கள், கோடை விடுமுறை போன்றவை வருவதால் தேங்காய் விலை அதிகரிக்கும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

பராமரிப்புச் செலவு அதிகரித்த நிலையில், தேங்காய் விலை அதிகரித்தால்தான் தங்களுக்கு லாபம் என விவசாயிகள் தெரிவித்தனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com