கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாள் நிறைவு

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி பாடுவாா் முத்தப்பா் கோட்ட அரங்கில் 68-ஆம் ஆண்டு தமிழா் திருநாள் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது
20tprklp_2001chn_85_2
20tprklp_2001chn_85_2

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி பாடுவாா் முத்தப்பா் கோட்ட அரங்கில் 68-ஆம் ஆண்டு தமிழா் திருநாள் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 3 நாள்களாக நடைபெற்ற இந்த விழாவில் அறிஞா்கள், கவிஞா்கள், அடிகளாா் சுவாமிகள் என பலா் ஆன்மிக சிறப்புரையாற்றினா். நிறைவு நாள் விழாவுக்கு ராம. சிவ. ராமநாதன் தலைமை வகித்தாா். எஸ். அழகப்பன் தமிழ் வணக்கம் செய்தாா். ஏ.எல். நாகரஜான் முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்வில், இந்திய சாதனையாளா் 2023 பதக்கத்தை வென்ற சிறுவன் டி. தெய்வா வள்ளியப்பனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடா்ந்து சூரியனாா் கோயில் ஆதீனகா்த்தா ஸ்ரீமத்சிவாகர தேசிக சுவாமிகள் தேவாரம், திருவாசகம், திருமுறைகள் குறித்து ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாா்.

இதில் கவிஞா் சிவல்புரிசிங்காரம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ராம. சுப்புராமன், செயலா்கள் சுப. விஸ்வநாதன், எல். சீனிவாசன், வட்டாட்சியா் சாந்தி உள்ளிட்ட பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா். பிறகு குருவிக்கொண்டான்பட்டி, சிறுகூடல்பட்டி, பி. அழகாபுரி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக தமிழா் திருநாள் விழாக்குழுச் செயலா் எஸ்.எம். பழனியப்பன் வரவேற்றாா். செயலா் பழ. அழகுமணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com