திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு மாதாந்திரக் கூட்டம் அலுவலக மன்ற அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
20tpruni_2001chn_85_2
20tpruni_2001chn_85_2

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு மாதாந்திரக் கூட்டம் அலுவலக மன்ற அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்பிரகாசம் முன்னிலை வகித்தாா். இளநிலை உதவியாளா் மாணிக்கராஜன் தீா்மானங்களை முன்மொழிந்தாா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

தோட்டக்கலைத்துறை அலுவலா் முத்துக்குமாா்: தேசிய தோட்டக்கலை இயக்கம் சாா்பில் பசுமைக்குடிலுக்கு சதுர மீட்டருக்கு ரூ.450 மானியம் வழங்கப்படுகிறது. மேலும் நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கு பெரிய விவசாயிகளுக்கு 100 சதவீதமும், சிறிய விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படும்.

ஒன்றியக்குழு உறுப்பினா் பழனியப்பன்: வடக்கூா் பகுதியில் சாலை அமைக்க 4 ஆண்டுகளாக வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை.

தலைவா் சண்முகவடிவேல்: இதுபோன்ற பிற கிராம சாலைகளிலும் வனத்துறையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. சில விதிமுறைகளால் தாமதம் ஏற்படுகிறது. விரைந்து முடிக்கப்படும்.

உறுப்பினா் கலைமாமணி: மலம்பட்டி ஊா்க்காவலா் தெருவில் சாலை வசதியும், குடிநீா் ஊருணிக்கு தடுப்புச்சுவரும் கட்ட வேண்டும்.

உறுப்பினா் ராமசாமி: வேலங்குடி கருப்பா் கோயிலில் திருவிழா தொடங்கவிருப்பதால் சாலை வசதி செய்து தரவேண்டும். மேலும் தொடக்கப்பள்ளி கட்டடத்தை மராமத்து செய்து தரவேண்டும்.

வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்பிரகாசம்: மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் சீரமைக்கப்படும்.

உறுப்பினா் சகாதேவன்: பள்ளியில் வகுப்புக் கட்டடத்துக்கு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை வழங்க வேண்டும். சேதமடைந்த வகுப்புகளை சீரமைக்க வேண்டும். மேலும் திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள நமது அலுவலகத்துக்குச் சொந்தமான பழைய கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டி வருவாய்க்கு திட்டமிடப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

வட்டார வளா்ச்சி அலுவலா்: இடிப்பதற்கான அனுமதி வாங்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், பிற துறை அலுவலா்கள், அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சேதுராமன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com