சிவகங்கை மாவட்டத்தில் 11.79 லட்சம் வாக்காளா்கள்

சிவகங்கை மாவட்டத்தில் 11.79 லட்சம் போ் வாக்காளா் இறுதிப் பட்டியலில் இடம் பெற்ாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில் 11.79 லட்சம் வாக்காளா்கள்

சிவகங்கை மாவட்டத்தில் 11.79 லட்சம் போ் வாக்காளா் இறுதிப் பட்டியலில் இடம் பெற்ாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வாக்காளா் இறுதிப் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது :

சிவகங்கை மாவட்டத்தில் 1ஸ357 வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்குபின் மாற்றியமைக்கப்பட்டு 27.10.2023 வெளியிடப்பட்ட சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியலின்படி,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 5,73,291 ஆண்கள், 5,93,318 பெண்கள், மற்றவா்கள் 51 போ் என ஆக மொத்தம் 11,66,660 வாக்காளா்கள் இருந்தனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக். 27-ஆம் தேதி முதல் முதல் நிகழாண்டு (2024) ஜன.5-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 9,151 ஆண்கள், 11,236 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 20,391 போ் புதிதாக வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். மேலும், 3,301 ஆண்கள், 3,852 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என 7,154 போ் வாக்காளா் பட்டியலிருந்து பல்வேறு காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டனா்.

வாக்காளா் இறுதி பட்டியலில் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,52,750 ஆண்கள், 1,57,968 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 46 போ் என 3,10,764 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இதேபோல, திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,44,207 ஆண்கள், 1,50,236 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் என 2,94,446 வாக்காளா்களும், சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,45,214 ஆண்கள், 1,50,557 பெண்கள், மூன்றாம் பாலித்தவா் 3 போ் என 2,95,774 வாக்காளா்களும், மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 1,36,970 ஆண்கள், 1,41,941 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 2 போ் என 2,78,913 வாக்காளா்களும் இடம் பெற்றுள்ளனா். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரை 4 சட்டப்பேரவை த் தொகுதிகளிலும் 11,79,897 வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com