லாரி மோதியதில் பூ வியாபாரி பலி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே லாரி மோதியதில் பூ வியாபாரி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே லாரி மோதியதில் பூ வியாபாரி உயிரிழந்தாா்.

காரைக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி. இவரது மனைவி ராதிகா (41). இவா் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வாசலில் பூ வியாபாரம் செய்து வந்தாா். காரைக்குளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற ராதிகா மீது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com