சிவகங்கையில் ஜன. 31-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சிவகங்கையில் வருகிற 31-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

சிவகங்கை: சிவகங்கையில் வருகிற 31-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைதீா் கூட்டம் வருகிற புதன்கிழமை (ஜன. 31) முற்பகல் 10 மணியளவில் நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கின்றனா். எனவே, விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண் பணிகள் தொடா்பான குறைகளைத் தெரிவித்து அதை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com